திருமணமான ஓராண்டில் இளம்பெண் தற்கொலை
திருமணமான ஓராண்டில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் போலீசில் புகார் செய்துள்ளார்.
திட்டக்குடி,
திட்டக்குடி நாளங்காடி தெருவை சேர்ந்தவர் வைரக்கண்ணு மகன் கார்த்திக்( வயது 33). இவர் குவைத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபிராமி(19). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டுஆகிறது. திருமணமான 2-வது மாதத்தில் கார்த்திக் குவைத்துக்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து, நாளங்காடி தெருவில் உள்ள கார்த்திக்கின் பெரியம்மா வெள்ளையம்மாளுடன் அபிராமி வசித்து வந்தார். மேலும் அவர் திட்டக்குடியில் உள்ள தனியார் நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
தூக்கில் தொங்கினார்
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு அபிராமி, விழுப்புரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் திட்டக்குடியில் உறவினர் வீட்டில் நடந்த பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக, அவர் வந்தார்.
விழாவில் பங்கேற்ற பின், நாளங்காடி தெருவில் உள்ள தனது பெரிய மாமியார் வெள்ளையம்மாள் வீட்டுக்கு சென்றார்.
அங்கு தங்கிய அபிராமி, இரவு 11.30 மணிக்கு மேல் ஒரு அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, சேலையால் தூக்குப்போட்டுக்கொண்டார்.
உடன் அங்கிருந்த உறவினர்கள் கதவை உடைத்து, அபிராமியை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அபிராமி இறந்து விட்டதாக தொித்தனர்.
சாவில் சந்தேகம்
இதுபற்றி அறிந்த திட்டக்குடி போலீசார் நோில் சென்று விசாரித்தனர். தொடர்ந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அபிராமியின் அண்ணன் பூபதி திட்டக்குடி போலீசில் புகார் செய்தார். அதில் தனது தங்கையின் சாவில் சந்தேகம் உள்ளது என்று தொிவித்து இருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அபிராமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.