தூக்கில் பிணமாக தொங்கிய இளம் பெண்


தூக்கில் பிணமாக தொங்கிய இளம் பெண்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே திருமணமான 11 மாதத்தில் இளம் பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார் கொடுத்துள்ளார்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி அருகே திருமணமான 11 மாதத்தில் இளம் பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார் கொடுத்துள்ளார்.

குடிப்பழக்கத்தால் தகராறு

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த சூரியகோட்டை மேலதோப்பு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (வயது 21). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த துளசேந்திரபுரம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்த சசிகுமார் (26) என்பவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4-ந் தேதி திருமணம் நடந்தது.

கணவருடன் மேல துளசேந்திரபுரத்தில் சங்கீதா வசித்து வந்தார். இந்த நிலையில் கணவர் சசிகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சங்கீதா கண்டித்தும் சசிகுமார் தொடர்ந்து மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ள வந்துள்ளது.

தூக்கில் தொங்கினார்

நேற்று முன்தினம் இரவு கணவர் சசிகுமார் மது அருந்தி வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று மதியம் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு சசிகுமார் வந்துள்ளார்.

அப்போது வீட்டில் சங்கீதா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக சங்கீதாவின் உடலை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சங்கீதாவை பரிசோதனை செய்த டாக்டாகள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சாவில் சந்தேகம்

சங்கீதாவின் தாயார் சவுந்தரவல்லி பரவாக்கோட்டை போலீசில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கீதாவுக்கு .திருமணம் ஆகி 11 மாதங்களே ஆவதால் மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனாமணி விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story