மயங்கி விழுந்த இளம்பெண் திடீர் சாவு
தந்தை இறந்த வேதனையில் இருந்த இளம்பெண் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
தந்தை இறந்த வேதனையில் இருந்த இளம்பெண் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
தந்தை இறந்ததால் வேதனை
தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 24). இவர் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆமத்தூரை சேர்ந்த கவிதா (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் கோவையில் வசித்து வந்தனர். இந்நிலையில் கவிதாவின் தகப்பனார் இறந்துவிட்ட நிலையில் கவிதாவும், செல்வமும் ஆமத்தூர் வந்தனர்.
பின்னர் செல்வம் தனது மனைவி கவிதாவை தன் சொந்த ஊரான வீரபாண்டிக்கு அழைத்து சென்றுவிட்டார். இந்தநிலையில் கவிதா தொடர்ந்து தனது தந்தை இறந்து விட்ட வேதனையில் அழுது கொண்டே இருந்ததுடன், சாப்பிடாமலும் இருந்ததாக கூறப்படுகிறது.
பெண் சாவு
செல்வமும், அவரது தாயாரும் கவிதாவை சமாதானப்படுத்தியும் அவர் தொடர்ந்து வேதனையடைந்த நிலையில் ஆமத்தூருக்கு சென்று தனது அம்மாவை பார்க்க வேண்டும் என்று செல்வத்திடம் கூறியுள்ளார். செல்வமும், கவிதாவை ஆமத்தூருக்கு பஸ்சில் அழைத்து வைத்த போது வரும் வழியில் பஸ்சில் கவிதா மயங்கி விழுந்தார். இந்தநிலையில் அவரை அங்கிருந்து ஒரு ஆட்டோவில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
ஆனால் கவிதா அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி செல்வம் கொடுத்த புகாரியின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.