பிரசவித்த இளம் பெண் திடீர் சாவு


பிரசவித்த இளம் பெண் திடீர் சாவு
x
தினத்தந்தி 8 Aug 2023 12:15 AM IST (Updated: 8 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் திடீரென இறந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

பிரசவம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கல்பனா (வயது 20). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கல்பனா கடந்த 5-ந் தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். பின்னர், நேற்று காலை 11 மணிக்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

சாவில் சந்தேகம்

இந்த நிலையில் மயக்க நிலையில் இருந்த கல்பனா நேற்று மாலை திடீரென உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்பனாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும், முறையான சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்றும் கூறி அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

பேச்சுவார்த்தை

மேலும் கல்பனாவின் சாவில் சந்தேகம் உள்ளது எனக் கூறி அவரது பிரேதத்தை வாங்க அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர், கல்பானாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story