பெண் பலாத்கார வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பெண் பலாத்கார வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லையில் பெண் பலாத்கார வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் ராமர் (வயது 28). இவர் மீது நெல்லை டவுன், தச்சநல்லூர், பேட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் கடந்த மாதம் 32 வயது இளம்பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து தாக்கியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமரை கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ராமரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர், உதவி போலீஸ் கமிஷனர் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதனை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஏற்று, ராமரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணையை தச்சநல்லூர் போலீசார் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை சிறையில் வழங்கினர்.


Next Story