திட்டக்குடி அருகே பெண் உடை மாற்றுவதை பார்த்த வாலிபர் கைது
திட்டக்குடி அருகே பெண் உடை மாற்றுவதை பார்த்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
கடலூர்
திட்டக்குடி
திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் 38 வயதுடைய பெண். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், வீட்டில் அந்த பெண் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் தனது வீட்டில் குளித்து விட்டு, உடை மாற்றிக் கொண்டிருந்தார். இதை நோட்டமிட்ட பக்கத்து வீட்டில் வசிக்கும் கோடி செல்வன் (வயது 28) என்பவர், அந்த பெண் உடை மாற்றுவதை கதவு ஓட்டை வழியாக பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்த போது, அங்கு கோடிசெல்வன் நின்று கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண், அவரிடம் தட்டிக்கேட்டுள்ளார். உடனே அவர் அந்த பெண்ணை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோடிசெல்வனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story