ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை துன்புறுத்திய வாலிபர் கைது


ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை துன்புறுத்திய வாலிபர் கைது
x

ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை துன்புறுத்திய வாலிபர் கைது

தஞ்சாவூர்

ஒரத்தநாடு அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை துன்புறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெண் துன்புறுத்தல்

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர் நேற்று அந்த பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற வீரமணி (வயது21) என்பவர் ஆடு மேய்த்து கொண்டிருந்த அந்த பெண்ணை கையை பிடித்து இழுத்து தூக்கி சென்று அந்த பெண்ணை துன்புறுத்தியுள்ளார். அப்போது அந்த பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனை பார்த்த வீரமணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

வாலிபர் கைது

இதில் காயம் அடைந்த அந்த பெண் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story