கடலூர் முதுநகரில் சாராய பாக்கெட் கடத்திய வாலிபர் கைது


கடலூர் முதுநகரில் சாராய பாக்கெட் கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகரில் சாராய பாக்கெட் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

கடலூர்

கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் நேற்று இரட்டை ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகமான முறையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், புதுச்சேரி மாநிலம் ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் பார்த்திபன் (வயது 29) என்று தெரிந்தது. அவரது பையை சோதனை செய்ததில், அதில் 25 சாராய பாக்கெட் இருந்தது. இதை அவர் புதுச்சேரியில் இருந்து கடத்தி குள்ளஞ்சாவடி பகுதிக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பார்த்திபனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 25 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்


Next Story