சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பின்வாசல் வழியாக பக்தர்களை அழைத்து சென்ற வாலிபர் கைது
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பின்வாசல் வழியாக பக்தர்களை அழைத்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி
சமயபுரம், செப்.19-
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இடைத்தரகர்கள் பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு பின்வாசல் வழியாக கோவிலுக்குள் அழைத்து சென்றனர். இதை தடுத்த தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரி ஆறுமுகத்தை சிலர் தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் சமயபுரம், அண்ணாநகர், மாகாளிகுடி, மருதூர், வி.துறையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இது தொடர்பாக நேற்று வி.துறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தண்டாயுதபாணி மகன் பார்த்திபன் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story