பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது
நெல்லை அருகே பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
நெல்லை அருகே உள்ள மணப்படைவீடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 28). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அதை மறைத்து வேறு ஒரு பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் சரவணனுக்கு ஏற்கனவே திருமணமானது அந்த பெண்ணுக்கு தெரிந்து தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சரவணன் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராதா வழக்குப்பதிவு செய்து, சரவணனை ேநற்று கைது செய்தார்.
Related Tags :
Next Story