திருவொற்றியூரில் சிறுமியை காதலித்து திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


திருவொற்றியூரில் சிறுமியை காதலித்து திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x

திருவொற்றியூரில் சிறுமியை காதலித்து திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை

திருவொற்றியூரில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்தவர் மதன்ராஜ் (வயது 30). இவரது சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். மளிகை கடைக்கு வந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் மதன்ராசுக்கு காதல் மலர்ந்தது. இதற்கு சிறுமியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 14-ந் தேதி மதன்ராஜ், சிறுமியை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு ்சென்றார். அங்கு இருவருக்கும் மதன்ராஜின் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

இதற்கிடையில் சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார், நாகர்கோவிலுக்கு சென்று சிறுமியை மீட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி, சிறுமியை காதலித்து திருமணம் செய்த மதன்ராஜ் மீது குழந்தை திருமண சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story