பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு


பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு
x

நாகை அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீச்சி தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை அருகே உள்ள கலசம்பாடி கீழத்தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் மணிகண்டன் (வயது24). இவரும், பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். மாணவியிடம் ஆசைவார்த்தைகளை கூறி அவருடன் மணிகண்டன் தனிமையில் இருந்துள்ளார்.இதனால் அந்த மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இதை பற்றி அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில்சேர்த்தனர்.இதுகுறித்து மாணவி நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story