சாராயம் விற்ற வாலிபர் கைது
சாராயம் விற்ற வாலிபர் கைது
நாகப்பட்டினம்
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணி மற்றும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று கீழ்வேளூர் போலீஸ் சரகம் ஏரவாஞ்சேரி ஊராட்சி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரவாஞ்சேரி சிவன் கோவில் தெருவில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் செல்வம் (வயது28) என்பவர் சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story