சாராயம் விற்ற வாலிபர் கைது


சாராயம் விற்ற வாலிபர் கைது
x

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே ஆழியூர் ஊராட்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடம்பரவாழ்க்கை கருவை தோப்பு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அவர், தே.மங்கலம் ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் வினோத் (வயது 30) என்பதும், அவர் அந்த பகுதியில் சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story