திருமண வீட்டில் நகை திருடிய வாலிபர் சிக்கினார்


திருமண வீட்டில் நகை திருடிய வாலிபர் சிக்கினார்
x

நெல்லையில் திருமண வீட்டில் நகை திருடிய வாலிபர் சிக்கினார்.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் அஸ்ரப் அலி மகன் முகைதீன் அப்துல்காதர் (வயது 28). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு மேலப்பாளையத்தில் வைத்து திருமணம் நடந்தது. அப்போது இவர் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் அங்கு இருந்த ஒரு வைர மோதிரம், தங்க மோதிரம், வெள்ளி கைச்செயின் மற்றும் 3 கைகெடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து மேலப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மேலப்பாளையம் அஸ்ரத் பிலால் தெருவை சேர்ந்த முகமது தையூப் (23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story