அரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது
ஆலங்குடியில் அரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை
ஆலங்குடி அரசமரம் பகுதியில் இளைஞர் ஒருவர் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டி வருவதாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அரிவாளை காட்டி மிரட்டி கொண்டிருந்த புதுக்கோட்டை மேட்டுப்பட்டியை சேர்ந்த பாண்டி செல்வம் (வயது 23) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பாண்டி செல்வத்தை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்திய போலீசார் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story