சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அ.மேட்டூர் புது காலனியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் மோகன்(வயது 33). இவர், 11 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அரும்பாவூர் போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மோகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மோகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து மோகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தற்கான உத்தரவு நகலை போலீசார் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். மோகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் மாவட்ட குற்ற பதிவேடு கூடத்தின் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், போலீஸ் ஏட்டு தயாளன் ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பெரிதும் பாராட்டினார்.


Next Story