மின் இணைப்புடன், ஆதார் எண் இணைக்கும் முகாம்
சோளிங்கரில் மின் இணைப்புடன், ஆதார் எண் இணைக்கும் முகாம் நடந்தது.
ராணிப்பேட்டை
சோளிங்கர் மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை சோளிங்கர் உதவி செயற் பொறியாளர் சங்கர் தொடங்கி வைத்தார். முகாமில் வீடு, கைத்தறி, விசைத்தறி, வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளுக்கான மின் இணைப்புதாரர்கள் தங்கள் மின் இணைப்புடன், ஆதார் எண்களை இணைத்தனர்.
ஆதார் எண்ணை இணைப்பதற்கு மினகட்டன அட்டை, ஆதார் அட்டை, செல்போன் எடுத்துவர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இளநிலை மின் பொறியாளர் மோகன்ராஜ், ஜெயபாரதி, முகவர்கள் ரமேஷ், சரவணப் பெருமாள் மற்றும் மின் பணியாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story