21-ந்தேதிக்குள் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்

21-ந்தேதிக்குள் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
x

21-ந்தேதிக்குள் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

21-ந்தேதிக்குள் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சோளிங்கர் கிராமிய மின் வாரிய பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களாகிய பழையபாளையம், ஆயல், கோவிந்தாங்கல், போளிப்பாக்கம், தப்பூர், அரியூர், வேணுகோபாலாபுரம், வெங்குபட்டு, தாளிக்கால், ஐப்பேடு மற்றும் கரிக்கல் கிராமங்களில் உள்ள வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி மற்றும் விவசாய மின் நுகர்வோர் தங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டிய கடைசிநாள் வருகிற 21.1.2023 ஆகும்.

எனவே மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை சோளிங்கர் கிராமிய மின் வாரிய அலுவலகத்தில் இணைத்துக் கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

Next Story