வேப்பங்காட்டில் ஆடி திருவிழா:நாராயணசுவாமி நிழல்தாங்கலில்வெள்ளிக் கிழமை திருக்கல்யாணம்


வேப்பங்காட்டில் ஆடி திருவிழா:நாராயணசுவாமி நிழல்தாங்கலில்வெள்ளிக் கிழமை திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேப்பங்காட்டில் ஆடி திருவிழாவை முன்னிட்டு நாராயணசுவாமி நிழல்தாங்கலில்வெள்ளிக் கிழமை திருக்கல்யாணம் நடக்கிறது.

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

வேப்பங்காடு நாராயணசுவாமி நிழல்தாங்கல் ஆடி திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) அய்யாவுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

ஆடி மாத பால்முறை திருவிழா

அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டு அம்மானையில் இடம் பெற்றுள்ள தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே வேப்பங்காடு அய்யா ஸ்ரீமன் நாராயணசுவாமி நிழல்தாங்கலில் ஆடி மாத பால்முறை திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா நாட்களில் தினமும் காலை, மதியம், இரவில் அய்யாவுக்கு பணிவிடையும், மாலையில் இசக்கி களஞ்சியத்தின் திருஏடு வாசிப்பும் நடைபெற்று வருகிறது.

இன்று, திருக்கல்யாணம்

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு ஸ்ரீகுரு சிவச்சந்திரனின் அருளிசை வழிபாடு நடக்கிறது.

நாளை (சனிக்கிழமை) மாலையில் பெண்கள் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும், குதிரை வாகனத்தில் அய்யா பவனியும் நடைபெறுகிறது.

நாளை மறுநாள், சந்தனகுடம் எடுத்தல்

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு சந்தனகுடம் எடுத்தலும், காலை 11 மணிக்கு பால் அன்னம் விடுதலும், இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக வாசிப்பும், இரவு 9 மணிக்கு வாகன பவனியும் நடைபெறுகிறது.

விழா நாட்களில் தினமும் காலை, மதியம், இரவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை அய்யாவின் நிழல்தாங்கல் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story