கரையூரான் நீலமேகம் கோவிலில் ஆடி பூஜை
கரையூரான் நீலமேகம் கோவிலில் ஆடி பூஜை நடைபெற்றது.
கரூர்
தோகைமலை அருகே ஆர்.டி.மலையில் பிரசித்தி பெற்ற கரையூரான் நீலமேகம் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆடி மாத 28-ந்தேதியொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் சுவாமிக்கு பால், பழம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து திரளான பக்தர்கள் சுமார் 500 கிடாய்களை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. மேலும், பக்தர்கள் சிலர் நிலம், திருமணம், வேலைவாய்ப்பு கேட்டும், பில்லி சூனியம் விலக்கக்கோரியும் மனதார சுவாமியை வழிபட்டு சென்றனர். இதில் கரூர், திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story