ஆம் ஆத்மி கட்சி கூட்டம்


ஆம் ஆத்மி கட்சி கூட்டம்
x

ஆம் ஆத்மி கட்சி கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகரில் ஆம்ஆத்மி கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டலத்தலைவர் அரசு சோமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுரேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் தென்மண்டல பொறுப்பாளர் ரமேஷ் சங்கர குமார் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட செயலாளராக சிவகுமாரும், மாவட்ட பொருளாளராக முனீஸ்வரரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் சட்டமன்ற பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். விருதுநகர் மாவட்ட மக்கள் பிரச்சினைகளை மாவட்ட அலுவலகத்திற்கு தெரிவித்தால் அதற்கு தீர்வு காண ஆம்ஆத்மி கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும் என அவர் கூறினார்.


Next Story