ஆம் ஆத்மி கட்சியினர் நூதன ஊர்வலம்


ஆம் ஆத்மி கட்சியினர் நூதன ஊர்வலம்
x

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நூதன ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

மணிப்பூா் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மணிப்பூர் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அச்சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நூதன ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட மகளிர் அணி தலைவி சாய் சுதா தலைமையிலான நிர்வாகிகள் வாயில் கருப்பு துணி கட்டி, கையில் தேசிய கொடியை ஏந்தியும், அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தூக்கிலிட கோரியும் பதாகைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் புதுக்கோட்டையில் அண்ணா சிலை அருகே தொடங்கி கீழ ராஜ வீதி வழியாக சென்று நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பழைய பஸ் நிலையம் அருகே மின்வாரிய அலுவலகத்தை வந்தடைந்தது.


Next Story