சுற்றுச்சூழல் மண்டலம் அமைப்பதை கைவிட வேண்டும்


சுற்றுச்சூழல் மண்டலம் அமைப்பதை கைவிட வேண்டும்
x

நெலாக்கோட்டை ஊராட்சியில் சுற்றுச்சூழல் மண்டலம் அமைப்பதை கைவிட வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே சோலாடி அரசு உண்டு உறைவிட பள்ளியில் நெலாக்கோட்டை ஊராட்சியின் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் டெர்மிளா பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்குமார், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் தேவராஜ், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இருந்து 1 கி.மீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சூழல் மண்டலம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஊராட்சியில் குவியும் குப்பைகளை குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற பொதுமக்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து 2 தீர்மானங்களும் நிைறவேற்றப்பட்டது. சேரங்கோடு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் லில்லி ஏலியாஸ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சந்திரபோஸ், ஊராட்சி செயலாளர், சஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story