தம்பதியிடம் வழிப்பறி; 2 பேர் கைது


தம்பதியிடம் வழிப்பறி; 2 பேர் கைது
x

தம்பதியிடம் வழிப்பறி; 2 பேர் கைது

புதுக்கோட்டை

விராலிமலை:

திருச்சி, பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்த சண்முகம் மகன் பழனியப்பன் (வயது 41). இவர் தனது மனைவியுடன் விராலிமலை அருகே உள்ள பாம்பாலம்மன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். விராலிமலை-திருச்சி சாலையில் உள்ள தனியார் பஞ்சுமில் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பழனியப்பன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி கணவன்-மனைவி இருவரையும் மிரட்டி அவர்களிடமிருந்து செல்போன், பணம் மற்றும் நகை ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பழனியப்பன் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் இவ்வழக்கில் தொடர்புடைய 2 பேர் இருப்பதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விராலிமலை போலீசார் திருநெல்வேலி மாவட்டம், மானூர் தாலுகா திருமலாப்புரத்தை சேர்ந்த சுடலை மகன் பெரியசாமி (38), ஆலங்குளம் ரோடு மாறாந்தை பகுதியை சேர்ந்த சங்கரன் மகன் பேச்சிமுத்து (27) ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து தம்பதியிடம் பணம்-நகையை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story