அப்துல்கலாம் நினைவு தினம்


அப்துல்கலாம் நினைவு தினம்
x

தூத்துக்குடியில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அப்துல்கலாம் நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனியசாமி, வேப்பலோடை அன்னை தெரசா கிராம பொதுநல சங்க செயலர் ஜேம்ஸ் அமிர்தராஜ், பொருளாளர் முத்துக்கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் ராஜபாண்டி, கருப்பசாமி, பட்டதாரி ஆசிரியர் கிரேஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர் தேவி வரவேற்று பேசினார். ஆசிரியர் ராமகிருஷ்ணன், முதுகலை ஆசிரியர் முத்துக்கனி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந் கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் ஜாய்பிரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முதுகலை ஆசிரியர் மாரிசாமி நன்றி கூறினார்.


Next Story