அப்துல்கலாம் பிறந்த நாள்
இளம்புவனம் கிராமத்தில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது.
எட்டயபுரம்:
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் எட்டயபுரம் பா.ஜனதா ஒன்றிய உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பாக இளம்புவனம் கிராமத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு உள்ளாட்சி பிரிவு மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் கருப்பசாமி, ஒன்றிய பொதுச்செயலாளர் காளிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அப்துல் கலாம் உருவப்படத்திற்கு ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ராம்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். இதே போன்று எட்டயபுரம், கான்சாபுரம் பகுதிகளில் இந்து முன்னணி சார்பாக அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
* வல்லநாடு துளசி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுஜா பாண்டியன் தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர் ஹீமாயூன் கபீர், இஜாஸ்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஸ்ரீவைகுண்டம் வனத்துறை அலுவலர் பிருந்தா கலந்துகொண்டு பேசினார். இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து கல்லூரி வளாகத்தில் 250 மரக்கன்றுகளை கல்லூரி மாணவிகள் நட்டினர். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.