அப்துல்கலாம் பிறந்தநாள் விழா


அப்துல்கலாம் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை பள்ளிக்கூடத்தில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி வளாகத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் விழா, உலக வசிப்பிட தினவிழா ஆகிய இருபெரும் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளா் ராம்மோகன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வா் ராணி ராம்மோகன், தலைமை ஆசிரியா் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாணவி இசக்கியம்மாள் அனைவரையும் வரவேற்று பேசினார். மாணவ-மாணவிகளுக்கு வினாடி வினா, கவிதை, கட்டுரை, ஓவிய போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு தொடர்பாக மாணவர்கள் நாடகம் நடித்து காட்டினர். மேலும் அப்துல்கலாமின் 91-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 91 மூலிகை மற்றும் பழமரக்கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அதனை பராமரிப்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

உலக வசிப்பிட தினத்தை முன்னிட்டு பள்ளிக்கு வருகை தரும் பறவைகள் மற்றும் விலங்குகள் கணக்கெடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. வினாடி வினா போட்டியில் 11-ம் வகுப்பு மாணவர் அப்துல்மஜீத் குழு வெற்றி பெற்றது. கவிதை போட்டியில் 5-ம் வகுப்பு மாணவி அகல்யா வெற்றி பெற்றார். போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னா் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவி இஷானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி தனமகேஷ்வரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் முருகன் மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.


Next Story