ஆர்டர்லி முறை ஒழிப்பு: நடவடிக்கை என்ன? டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி


ஆர்டர்லி முறை ஒழிப்பு: நடவடிக்கை என்ன? டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
x

ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும், ஆனால் அரசு டிஜிபியிடமிருந்து அது வருவதில்லை என நீதிபதி கூறியுள்ளார்.

சென்னை,

ஆடர்லி முறை ஒழிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆங்கிலேயே ஆடர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது. ஆடர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும், ஆனால் அரசு மற்றும் டிஜிபியிடம் இருந்து அது வருவதில்லை என நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் கூறியுள்ளார். ஆடர்லி பயன்படுத்தும் காவல்துறை உயரதிகாரிகளை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உண்டு.

ஆடர்லிகள் விவகாரத்தில் முதல்-அமைச்சரின் எச்சரிக்கை மட்டும் போதாது, உரிய நடவடிக்கை தேவை என்றும் கூறினார். மேலும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவது, 24 மணி நேர ரோந்து செல்வது போன்ற போலீசாரின் பணி பாராட்டத்தக்கது என்றார்.

ஆடர்லில் ஒழிப்பு பற்றி உள்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். 19 ஆர்டர்லிகள் திரும்பப்பெறப்பட்டுள்ளனர். 24 மணி நேரம் கூட எங்களுக்கு போதவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆடர்லி முறை ஒழிப்பு தொடர்பாக நடவடிக்கைகள் குறித்து டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story