தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்


தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்

விக்கிரவாண்டி

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆணவ படுகொலையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சங்கரன், செயலாளர் கண்ணதாசன், துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் மேகநாதன், கலப்பு திருமண தம்பதியர் சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத்தலைவர் தமிழரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெருமாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story