தீண்டாமை ஒழிப்பு, தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு


தீண்டாமை ஒழிப்பு, தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
x

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு, தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருப்பத்தூர்

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

''தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்றும். தொழுநோயினால் உடல் குறைபாடு உள்ளவர்களை அன்பாகவும் எனது குடும்ப உறுப்பினர்கள் போலவும் வேறுபாடு இல்லாமல் உரிய மரியாதையுடன் நடத்துவேன். தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக அனைவருடன் இணைந்து ஒத்துழைப்பேன்'' என்று அனைத்துத் துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், தனித்துணை கலெக்டர் கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார் வேளாண்மை இணை இயக்குனர் பாலா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story