கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது


கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
x
தினத்தந்தி 28 April 2023 1:00 AM IST (Updated: 28 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

அன்னதானப்பட்டி:-

சேலம் தாதகாப்பட்டி, சண்முகநகரைச் சேர்ந்தவர் குணசேகரன் என்கிற கெத்தை சேகர் (வயது 45). தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் இவர் மீது விசாரணை நடத்தினர். அங்கிருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த குணசேகரனை போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story