கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது


கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது
x

விக்கிரமசிங்கபுரத்தில் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு கொலை வழக்கில் செட்டிமேடு இந்திரா காலனியை சேர்ந்த முருகன் (வயது 55) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் நேற்று முருகனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.



Next Story