தலைமறைவாக இருந்த பெண் கைது
கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
மானூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குறிச்சிகுளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயப்பிரியா (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 5 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இவருக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து அவரை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார். அதன்படி மானூர் போலீசார் ஜெயப்பிரியாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
Related Tags :
Next Story