ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் கைது
ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் கைது
திருப்பூர்
காங்கயம்,
காங்கயத்தை சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை காங்கயம் பஸ் நிலையத்திற்கு தனது தோழி ஒருவரை அனுப்பி வைப்பதற்காக வந்துள்ளார். அப்போது காங்கயத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நந்தகுமார் (வயது 27), ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கோகுல்கார்த்திக் (22), கோவிந்தராஜ் என்ற சுரேஷ் (27), ஊதியூர் பகுதியை சேர்ந்த வீராசாமி என்ற கண்ணன் (24) ஆகிய 4 பேர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து தகாத முறையிலும், ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காங்கயம் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நந்தகுமார், கோகுல்கார்த்திக், கோவிந்தராஜ் என்கிற சுரேஷ், வீராசாமி என்கிற கண்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story