ரெயிலில் அடிபட்டு ஏ.சி.மெக்கானிக் சாவு


ரெயிலில் அடிபட்டு ஏ.சி.மெக்கானிக் சாவு
x

ஆம்பூர் அருகே ரெயிலில் அடிபட்டு ஏ.சி. மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியங்குப்பம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவரது மகன் அருண்குமார் (வயது 25), ஏ.சி. மெக்கானிக் டிப்ளமோ படித்துள்ளார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவி பெயர் அபிராமி. இவர்களுக்கு அதிதி (வயது 1½) என்ற மகள் உள்ளாள்.

நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை விண்ணமங்கலம் ஆம்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பாலத்தில் ரெயிலில் அடிபட்ட நிலையில் அவரது உடல் கிடந்தது.

இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவர் ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறக்க வாய்ப்புள்ளது. ஆனால் அருண்குமார் இறந்த இடத்தில் தண்டவாளத்தை கடப்பதற்கு வாய்ப்பே இல்லை. இதனால் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அதற்கு என்ன காரணம் அல்லது தண்டவாளம் வழியாக பாலத்தில் சென்றபோது ஒதுங்க இடமில்லாமல் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா என்பது கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில் அருண்குமார் உடலை ரெயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணம் ஆகி 3 வருடங்களில் அருண்குமார் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story