வீட்டின் ஏ.சி. எந்திரத்தில் புகுந்த பாம்பு பிடிபட்டது
வீட்டின் ஏ.சி. எந்திரத்தில் புகுந்த பாம்பு பிடிபட்டது
புதுக்கோட்டை
அன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பள்ளி வாசல் காடு பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன். இவரது வீட்டுக்குள் ஜன்னல் வழியாக புகுந்த 6 அடி நீளமுள்ள கருஞ்சாரைப்பாம்பு ஒன்று ஏ.சி. எந்திரத்திற்குள் புகுந்தது. இதைப்பார்த்த முகமது உசேன் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அந்த பாம்பை பிடித்து காப்பு காட்டில் கொண்டு விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story