போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் பங்கேற்பு
போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் பங்கேற்றார்.
அரியலூர்
ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக "போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி" நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் கீதாராணி, ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
Related Tags :
Next Story