போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு


போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
x

போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பெரம்பலூர்

குன்னம்:

போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவது குறித்து, போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, போலீஸ் சூப்பிரண்டு மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் போதை பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியை அமைச்சர் வாசிக்க, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர். பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகள், போதைப்பொருள் உள்கொள்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள், தண்டனைகள் மற்றும் வாழ்க்கையை தொலைத்த மாணவர்கள், சிறை சென்ற மாணவர்கள் மற்றும் குடும்பத்தினரின் நிலை குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள் என மொத்தம் 512 பள்ளிகளிலும், 12 கல்லூரிகளிலும் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story