தூய்மை குறித்த உறுதிமொழி ஏற்பு


தூய்மை குறித்த உறுதிமொழி ஏற்பு
x

தூய்மை குறித்த உறுதிமொழி ஏற்பு

நீலகிரி

கூடலூர்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் வழிபாட்டு தலங்களை தூய்மைப்படுத்துதல், பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்தல், குப்பை கொட்டும் இடத்தை சுத்தம் செய்த்ல ஆகியன மேற்கொள்ளப்பட்டது. தூய்மையை பேணி காப்பது குறித்து பெரியார் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்களால் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

தொடர்ந்து 75-வது சுதந்திர தின விழாவையொட்டி பேரூராட்சி அலுவலகம், தபால் நிலையம், ரேஷன் கடை, மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. மேலும் தோட்ட தொழிலாளர்களுக்கு தேசிய கொடி இலவசமாக வழங்கப்பட்டது.


Next Story