ரூ.17 கோடியில் வடமலைகுறிச்சி சந்திப்பில் அணுகு சாலை


ரூ.17 கோடியில் வடமலைகுறிச்சி சந்திப்பில் அணுகு சாலை
x

ரூ.17 கோடியில் வடமலைகுறிச்சி சந்திப்பில் அணுகு சாலை அதிகாரிகள் கூறினர்.

விருதுநகர்


விருதுநகர் நான்கு வழிச்சாலையில் வடமலை குறிச்சி ரோடு சந்திப்பில் அணுகு சாலை வேண்டுமென அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் இந்த இடத்தில் அணுகு சாலையமைக்க ரூ. 17 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு வந்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர். அதுவரை தற்காலிக ஏற்பாடு செய்ய வேண்டும் என ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியதின் பேரில் அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story