தனித்தனி விபத்து; 3 வாலிபர்கள் பலி
விருத்தாசலம் பகுதியில் நடந்த தனித்தனி விபத்தில் 3 வாலிபர்கள் பலியானார்கள்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த ஏ.சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை மகன் வீரமணி(வயது 36). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த செல்லவேல் மகன் ராகுல்காந்தி(30) எனபவரும், இன்று மாலை விருத்தாசலம்-வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் விளாங்காட்டூர் பழத்தோட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது, விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற கார், 2 பேர் மீதும் மோதியது. இதில் வீரமணி, ராகுல்காந்தி ஆகிய 2 பேரும் பலியானார்கள்.
மற்றொரு விபத்து
கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் கோபி மகன் டேவிட்(22). இவர் நேற்று முன்தினம் விருத்தாசலம்-சேலம் புறவழிச்சாலையில் பொன்னேரி அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், டேவிட் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் டேவிட் பலியானார். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த 2 விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.