தாளவாடி அருகே தலைகுப்புற கவிழ்ந்த கார்


தாளவாடி அருகே தலைகுப்புற கவிழ்ந்த கார்
x

தாளவாடி அருகே தலைகுப்புற கவிழ்ந்த கார்

ஈரோடு

தாளவாடி

பெருந்துறையை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் சென்றார். தாளவாடியை அடுத்த ஆசனூர் செம்மண்திட்டு என்ற இடத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென தலைகுப்புற கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story