திருமணத்துக்கு ஜவுளி எடுத்துக்கொண்டு வந்தபோது மரத்தில் வேன் மோதி 9 பேர் படுகாயம்
திருமணத்துக்கு ஜவுளி எடுத்துக்கொண்டு வந்தபோது மரத்தில் வேன் மோதி 9 பேர் படுகாயம்
சத்தியமங்கலம்
கோவையை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 69). இவருடைய மகன் கார்த்திகேயன். இவருக்கு வருகிற 10-ந் தேதி திருமணம் நடக்கிறது. இதனால் திருமணத்திற்காக ஜவுளிகள் எடுக்க காஞ்சிபுரத்துக்கு ஜெயலட்சுமி மற்றும் கார்த்திகேயன் உட்பட 14 பேர் வேனில் சென்றார்கள். ஜவுளி எடுத்துக்கொண்டு சத்தியமங்கலம் வழியாக கோவை சென்றபோது சத்தி எஸ்.ஆர்.டி.கார்னரில் வேன் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இடிபாடுகளில் சிக்கி வேனில் சென்ற ஜெயலட்சுமி, ரவிக்குமார், சாந்தி, சுரேஷ், ரம்யா பிரியா, மேகலா, காஞ்சனா, சண்முகம், வேன் டிரைவர் ராஜ்மோகன் ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தார்கள். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.