தம்மம்பட்டி அருகே மின்கம்பத்தில் மொபட் மோதி தொழிலாளி பலி
தம்மம்பட்டி அருகே மின்கம்பத்தில் மொபட் மோதி தொழிலாளி பலியானார்.
சேலம்
தம்மம்பட்டி:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்தவர் சேர்ந்த முத்துசாமி (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் கொல்லிமலை பகுதியில் இருந்து மொபட்டில் தம்மம்பட்டியில் உள்ள ஒரு கடையில் மளிகை பொருள் வாங்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது தம்மம்பட்டி அருகே வாழக்கோம்பை கருமாய்வட்டம் பகுதியில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மொபட் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story