மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் சாவு


மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் சாவு
x

மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.

கார் மோதியது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சாமிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் காளிராஜ்(வயது 34). அதே ஊரை சேர்ந்தவர் வைரமுத்து(38). இவர்கள் இருவரும் நேற்று மோட்டார்சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை காளிராஜன் ஓட்டினார். வைரமுத்து பின்னால் அமர்ந்து இருந்தார்.

சாமிநத்தம் அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற கார் இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

2 பேர் சாவு

இதில் படுகாயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காளிராஜ், வைரமுத்து ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த ராஜபாளையத்தை சேர்ந்த முகமது(31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story