ஆசனூர் அருகே ரோட்டோர பள்ளத்தில் பாய்ந்த பஸ்- 40 பயணிகள் உயிர் தப்பினர்


ஆசனூர் அருகே ரோட்டோர பள்ளத்தில் பாய்ந்த பஸ்- 40 பயணிகள் உயிர் தப்பினர்
x

ஆசனூர் அருகே ரோட்டோர பள்ளத்தில் பாய்ந்த பஸ்- 40 பயணிகள் உயிர் தப்பினர்

ஈரோடு

தாளவாடி

ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு தமிழக அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மாலை 3 மணி அளவில் திம்பத்தை அடுத்த செம்மண்திட்டு என்ற இடத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோர பள்ளத்தில் பாய்ந்து அங்குள்ள மண் திட்டு மீது மோதி நின்றது.

இதில் டிரைவர், கண்டக்டர் உள்பட பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதைத்தொடர்ந்து பயணிகள் மாற்று பஸ்சில் ஏறி மைசூருக்கு சென்றனர். இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story