கார் மோதி முதியவர் சாவு
கார் மோதி முதியவர் இறந்தார்.
மயிலாடுதுறை
சீர்காழி அருகே உள்ள மங்கைமடம் கிராமம் வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது62). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அண்ணன் கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். மேலச்சாலை பள்ளிவாசல் எதிரில் சென்றபோது கருவியில் இருந்து சீர்காழி நோக்கி வந்த காரும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதின. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் கும்பகோணம் லட்சுமி விலாஸ் தெருவை சேர்ந்த துரைசாமி (52) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story