கருப்பூர் அருகே 20 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது; டிரைவர் படுகாயம்
கருப்பூர் அருகே 20 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
சேலம்
கருப்பூர்:
காடையாம்பட்டி அருகே உள்ள தும்பிப்பாடி முள்ளிச்செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பொம்ம நாயக்கர். இவருடைய மகன் முருகவேல் (வயது 24). டிராக்டர் டிரைவர். இவர் சேலத்தில் இருந்து சிமெண்டு மூட்டைகள் ஏற்றிய ஒரு டிராக்டரை ஓட்டிச்சென்றார். அப்போது கருப்பூர் அருகே கரும்பாலை என்ற இடத்தில் சென்ற போது சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. இதில் சிமெண்டு மூட்டைக்குள் சிக்கிய முருகவேல், பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story