நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பேன்சி ஸ்டோர் உரிமையாளர் பலி


நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பேன்சி ஸ்டோர் உரிமையாளர் பலி
x

நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பேன்சி ஸ்டோர் உரிமையாளர் பலியானார்.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 35). பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் (29). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். ஓட்டல் எதிரே சாலையை கடக்க முயன்றபோது திருச்செங்கோட்டில் இருந்து வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார். அர்ஜூன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ராஜ்குமாரின் மனைவி சத்தியபிரியா (30) நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story